Print this page

சிவாஜி லிங்கத்துக்கு போட்டது “பாம்பு”

November 21, 2020

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு அரவம் தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த அரவம் ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார்.