Print this page

மரணித்த 9 பேரில் ஒருவர் வெள்ளவத்தை

November 22, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(21) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,771 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13,590 பேர் குணமடைந்துள்ளதுடன், 6,107 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்று (21) மட்டும் ஒன்பது பேர் மரணித்தனர். அதிலொருவர் வெள்ளவத்தையைச் சேர்ந்தவர் ஆவார்.

வௌ்ளவத்தையைச் ​சேர்ந்த 76 வயதான ​ஆணொருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து, கொவிட்-19 தொற்றாளர் என இனங்காணப்பட்ட அவர், முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு மரணமடைந்துவிட்டார்.

கொவிட்-19 நிமோனியாவுடன் பக்றீரியாவும் தொற்றிக்கொண்டது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் மரணமடைந்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.