Print this page

பசில் மீதான தடை நீக்கம்

November 23, 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கபட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

அத்துடன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவால் இன்று (23)  நீக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.