Print this page

ஐபிஎல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

November 23, 2020

இந்தியாவில் கடுமையான கொரோனா  கட்டுப்பாடுகள் இருந்ததால்  2020 ஐபிஎல் தொடர் நடுக்குமா? நடக்காதா? என எதிர்பார்த்து வந்தநிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள்  செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற்றன.

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் சபையின் பொருளாளர் அருண் துமல் வெளியிட்டு உள்ள தகவல் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் சபை ரூ 4,000 கோடி வருமானம் ஈட்டி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. மேலும் 60 போட்டிகளில் 1800 தனி நபர்கள் உள்பட 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என இந்திய கிரிக்கெட் சபையின் பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.