Print this page

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

November 26, 2020

 
மீட்டியாகொட தொடகமுவ பாலத்துக்கு அருகில் நீராடச்சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

07 வயது சிறுவன் மற்றும் 10 வயது சிறுமிய ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
ஹிக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சிறுவர்கள் சிலருடன் சேர்ந்து நீராடச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.