Print this page

அஜித் டோவால் - மஹிந்த சந்தித்து பேச்சு

November 27, 2020

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அஜித் டோவால் இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்றும், நாளையும் கொழும்பில் நடக்கவுள்ள முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் அஜித் டோவால் பங்கேற்பார்.

இந்த மாநாட்டில் பங்களாதேஷ், சீசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்து சமுத்திரத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரிவுபடுத்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.