Print this page

கிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி

November 29, 2020

கிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், திருகோணமலை மாவட்டத்தில் 16 தொற்றாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 தொற்றாளர்களும் அம்பாறை பிராந்தியத்தில் 08 தொற்றாளர்களும் கல்முனை பிராந்தியத்தில் 65 தொற்றாளர்களும் உள்ளடங்குகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.