Print this page

மஹரவில் 4 சடலங்கள் மீட்பு: பற்றி எரிகிறது

November 29, 2020

மஹர சிறைச்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட பதற்றமின்மை காரணமாக, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தால், மரணமடைந்த நால்வரின் சடலங்களை ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காயங்களுக்கு உள்ளான 24 கைதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலை வளாகத்துக்குள் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் கடும் பிரயத்தனம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

​மேலதிக பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு வெளி​யே குவிந்துள்ளனர் என தெரியவருகின்றது.

மஹர சிறைச்சாலையில் இன்று (29) மாலை ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கைதி ஒருவர் பலியாகியுள்ளார். இன்னும் மூன்று கைதிகள் காயமடைந்துள்ளனர்.

எனினும், பதற்றம் இன்னுமே தனிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.