Print this page

மஹர சிறையில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு

November 30, 2020

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற  பொழுது நேற்று மாலை இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

அத்துடன், பதற்ற நிலை காரணமாக மஹர சிறைச்சாலையில் தீப்பரவலும் ஏற்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டிருந்தது.