Print this page

PCR-ஐ புறக்கணித்தால் 3 வருட சிறை

November 30, 2020

பிசிஆர் பரிசோதனைகளுக்கு சமூகமளிக்குமாறு சுகாதாரத் தரப்பினரால் அறிவுறுத்தப்படும் நிலையில், அதனைப் புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிசிஆர் பரிசோதனைகளைப் புறக்கணிப்போருக்கும் அவர்களுக்கு உதவுவோருக்கும் 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக எழுமாறாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், சிலர் அதனைப் புறக்கணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.