Print this page

கூரைமீதேறி பெண் கைதிகள் ஆர்ப்பாட்டம்

November 30, 2020

நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நான்கு பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் சில பெண் கைதிகள், தரையில் இருந்தவாறு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்து, குறித்த பெண் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.