Print this page

வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

December 02, 2020

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.