Print this page

மாத்திரை குறித்து விசாரணை

December 04, 2020

மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்படுவதற்கு முன்னதாக, அந்த மோதலுக்கு காரணமான கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும்  மாத்திரை வகைகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் தொடர்பில், மருந்தியல் வல்லுநர்களிடம் கருத்தினை பெற்றுக்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் மோதல் குறித்த விசாரணையில், நேற்று மற்றும் நேற்று முன்தினம் 56 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 04 December 2020 04:25