Print this page

சாதனை அளவை தொட்டது அமெரிக்கா

December 05, 2020

அமெரிக்காவில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 35ஆயிரத்து 272பேர் பாதிக்கப்பட்டதோடு, இரண்டாயிரத்து 718பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக மூன்று முறை நாளொன்றுக்கான பாதிப்பு, அமெரிக்காவில் இலட்சத்துக்கும் மேற்பட்டோரை கடந்திருந்த போதும், இதுவே இதுவரை பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை ஒரு கோடியே 47இலட்சத்து 72ஆயிரத்து 535பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு இலட்சத்து 85ஆயிரத்து 550பேர் உயிரிழந்துள்ளனர்.