Print this page

‘எனக்கு இன்று இறுதி நாள்’

December 05, 2020

எனக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதியன்று விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது. ஆகையால், சபையில் இன்று (05) இறுதியாக உரையாற்றுகின்றேன் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ரஞ்சன் ராமநாயக்க, உரையாற்றுவதற்கு அனுமதியளிக்குமாறு கோரிநின்றார்.

“இன்று எனது இறுதி நாளாக இருக்கலாம். எதிர்வரும் 8ஆம் திகதியன்று எனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது. குறைந்தது இரண்டுமாதங்கள் இல்லை​யேல் 2 வருடங்கள் என்னை சிறையில் அடைப்பாளர்கள். ஆகையால், நீதிமன்றம் தொடர்பில் உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் அளிக்கவும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பியான ஷாமர சம்பத் குறுக்கீடுகளை செய்துகொண்டிருந்தார். அதன்போது கருத்துரைத்த ரஞ்சன் ராமநாயக்க, ‘சபாநாயகர் அவர்களே!, அந்த உண்டியலை உடைத்து, இவருடைய வாயில் திணியுங்கள், என்னை உரையாற்றுவதற்கு அனுமதியளியுங்கள்’ எனக் கேட்டுக்கொண்டார்.