Print this page

பஸ் போக்குவரத்தில் அதிரடி மாற்றம்

December 06, 2020

ஒவ்வொரு பஸ் பயணங்களின் போதும் இரண்டு பஸ்களை ஈடுபடுத்த நாளை தொடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பஸ்களை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பயணிகளை இருக்கையில் மாத்திரம் அழைத்துச் செல்வதற்கு கடந்த தினம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும், சில வீதிகளில் அதிகமான பயணிகள் ஏற்றிச் செல்லப்படுவதாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

அவ்வாறு செயற்படும் பஸ்கள் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என,
நாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.

அதேபோல் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பஸ்களை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.