Print this page

கட்டியணைத்த அதிகாரிக்கு ஆப்பு

December 07, 2020

பிரதான சிறை வாயில் காவலர் உள்ளிட்ட பலரை கட்டியணைத்த  சிறைச்சாலை காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

'ஏனையோருக்கு கொரோனா பரப்பியதைப் போன்று, உங்களுக்கும் கொரோனாவை பரப்ப வேண்டும்'  என தெரிவித்து கட்டியணைத்த , வட்டரக்க சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளாரென அவர் தெரிவித்துள்ளார்.