Print this page

இருவர் உயிரிழப்பு; 703 பேருக்கு தொற்று

December 07, 2020

இலங்கையில் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

இறுதியான இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு உறுதிப்படுத்திய நிலையில், இலங்கையில் கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.

உரிய வசிப்பிட முகவரி தெரியாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நியுமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 13 ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட்19 தொற்றுடன், நீரிழிவு நோய் காணப்பட்டமையே இந்த உயிழப்புக்கான காரணம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 703 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,580ஆக அதிகரித்துள்ளதுடன், 20,804 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர். தற்போது, தொற்றினால் பாதிக்கப்பட்ட 7634 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last modified on Tuesday, 08 December 2020 05:31