Print this page

மஹர கலவரம்: இன்று அறிக்கை சமர்பிப்பு

December 09, 2020

அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (09) அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 165 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.