Print this page

655 பேர் நாடு திரும்பினர்

December 09, 2020

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 655 பேர் இன்று(08) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் இருந்து 293 பேரும், கட்டாரில் இருந்து 111 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 191 பேரும் இவ்வாறு நாடு திரும்பியவர்களில் உள்ளனர்.

அத்துடன், மாலைத்தீவில் இருந்தும் இலங்கையர்கள் 60 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.