Print this page

பட்ஜட் வாக்கெடுப்பு இன்று

December 10, 2020

2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

 வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல்  மாலை 5 மணிவரை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இன்றைய குழுநிலை விவாதத்தின் போது நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள், நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் சமுர்த்தி, உள்ளக பொருளாதார, நுண்நிதிய சுயதொழில், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான வரவு -  செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அத்துடன் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி காலை 10 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது