Print this page

மஹிந்தவை சந்தித்த தமிழ் எம்பிகள்

December 10, 2020

தமர் மஹிந்த ராஜபக்‌ஷவை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சிறையில் இருக்கும் 80இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்யக் கோரியே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், வினோ நோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், வினோ நோகராதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், செல்வராசா கஜேந்திரன், மனோ கணேசன், வே.ராதாகிருஷ்ணன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், ஆர்.சாணக்கியன் மற்றும் தவராசா கலையரசன் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதமும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.