Print this page

மயங்கி விழுந்த நடிகை: அதுதான் காரணமா!

December 13, 2020

ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது மதுமிதா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பானது.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் அனபெல் சுப்ரமண்யம் படப்பிடிப்பு கடந்த மாதம் முதல் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

விரதம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வரும் மதுமிதா நாள் முழுவதும் உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளார். அன்றைய தினம் இரவு நேர படப்பிடிப்பும் தொடரவே, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

உடனடியாக பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர், இருப்பினும் அன்றைய காட்சிகளை முடித்துவிட்டே சாப்பிட சென்றாராம்.