Print this page

வடக்கில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

December 14, 2020

யாழ்ப்பாணம், வலிகாமம் – உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரை குறித்த பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். உடுவில் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வலயக்கல்வி பணிப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வவுனியா – சாளம்பைக்குளத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சாளம்பைக்குளம் அல் அக்‌ஷா முஸ்லிம் பாடசாலை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு. இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Last modified on Monday, 14 December 2020 06:20