Print this page

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருவர் பலி

December 14, 2020

அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல் நகரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, லாஸ் ஏஞ்சல் நகர மேயர் எரிக் கார்ஷெட்டி கூறுகையில், ‘கடந்த வாரம் ஒவ்வொரு 20 நிமிடத்திலும் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகிவருகிறார்கள்.

தவிர கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான படுக்கைகள் தேவை ஏற்பட்டுள்ளதால் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.