Print this page

முன்பள்ளிகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்

December 14, 2020

பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் வருகை தற்போது நூற்றுக்கு 51 சதவீதமான அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில்,சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பாலர் பாடசாலை மற்றும் தரம் 01 முதல் 05ஆம் வகுப்பு வரையான கல்விநடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் இந்தமாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.