Print this page

சாளம்பைக்குளம் முடக்க நிலை நீடிப்பு

December 14, 2020

வவுனியா புதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மேலும் மூன்று பேருக்கு கொனேரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொழும்பில் இருந்து வவுனியா திரும்பிய தாயும்,மகளும் சாளம்பைக்குளத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த இருவரது இருப்பிடமான வவுனியா புதிய சாளம்பைக்குளம் பகுதி நேற்றுமுன்தினம் காலை முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்களிடம் பீசீஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தது.

இதனையடுத்து அங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்கநிலை நீடிக்கப்பட்டுள்ளதுடன, குறித்த பகுதியில் அமைந்துள்ள அல்அக்சா பாடசாலையை எதிர்வரும் 16 ஆம் திகதி வரைக்கும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.