Print this page

அப்துல்லா மஹ்ரூப் கைது

December 15, 2020

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், இன்று (15) காலை 6.30 மணியளவில் காலை கிண்ணியாவில் உள்ள அவரது  வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியும், தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.