Print this page

மதுபானத்தை அருந்திய இருவர் மரணம்

December 15, 2020

கம்பஹா, மீரிகம பகுதியில் ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.

அத்துடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.