Print this page

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம்

December 15, 2020

வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனம் பதிவு செய்யப்படும்போது, ​​பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனிப்பட்ட எண் வழங்கப்படுகிறது, இதனால் வாகனத்தை திணைக்களத்தின் தரவுத்தளத்தில் மூலம் அடையாளம் காண முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய முறையின்படி, ஒவ்வொரு முறையும் மாகாணங்களுக்கு இடையில் ஒரு வாகனம் மாற்றப்படும் போது எண் தகடுகளை மாற்ற வேண்டியதில்லை.