Print this page

கிழக்கில் சில பிரதேசங்கள் முடக்கம்

December 17, 2020

கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் இன்று(17) காலை 6.00 மணிமுதல்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும்,  அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும், ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில், அக்கரைபற்று 5,14,03, ஆகிய பகுதிகளும், அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் பாலமுனை 01, ஒலுவில் 02, அட்டாளைச்சேனை 8 ஆகிய பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் ஆலையடிவேம்பு   8/01, ஆலையடிவேம்பு 8/03 மற்றும் ஆலையடிவேம்பு 9 ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் அலுபொத்த கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.