Print this page

பதவியில் இருந்து விலகினார் சிறீதரன்

December 19, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விலகியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிறீதரன் அவர்களை தொடர்புகொண்டு வினவிய பொழுது, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து வெளியேறியமை உண்மை என தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருட காலமாக குறித்த பதவியில் இருந்துள்ளேன். அதுமட்டுமல்லாது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் ஆரோக்கியமாக இல்லாமையாலும் அவர்கள் ஊடகங்களில் கொறடா என்கின்ற பதவியினை வைத்து சிறீதரன் பணம் சம்பாதிப்பது போல் ஒரு மாயயை உருவாக்கி வருகிறார்கள்.

ஆகவே அவ்வாறானதொரு பதவி எனக்கு தேவை இல்லை என்று அப் பதவியில் இருந்து வெளியேறி உள்ளேன் என்று தெரிவித்த அவர், குறித்த விடயம் தொடர்பில் பராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனிடம் உத்தியோக பூர்வமாக அறிவித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.