Print this page

கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு

December 19, 2020

புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளது.

அதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பிக்க வேண்டிய முன்மொழிவுகள் தொடர்பில் முடிவெடுக்க கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு சனிக்கிழமை கொழும்பில் கூடுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இதன்போது புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகள், சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் ஐ.நா. தீர்மான விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

Last modified on Saturday, 19 December 2020 05:15