Print this page

மேலும் 6 பேர் கொரோனாவுக்கு பலி

December 20, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

கொழும்பு 14 ஐச் சேர்ந்த 39 வயது பெண், வீரகுல பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 77 வயது ஆண், கொழும்பு 10 ஐச் சேர்ந்த 76 வயது ஆண், கிரிவத்துட்டுவ பகுதியைச் சேர்ந்த 88 வயது பெண், பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 158 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.