Print this page

மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவு

December 22, 2020

நாட்டில் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர்- 68 வயது ஆண், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 55 வயது ஆண், தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 77 வயது ஆண், மக்கொன பகுதியைச் சேர்ந்த 63 வயது பெண், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 83 வயது ஆண் ஆகியோரே இறுதியாக உயிரிழந்துள்ளனர்.