Print this page

விபசார விடுதி முற்றுகை; 9 பெண்கள் கைது

December 25, 2020

கல்கிஸை பகுதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அதிசொகுசு வீடொன்றில் இந்த விபசார விடுதி இயங்கி வந்துள்ளதோடு, 9 பெண்களும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் அம்பலாந்தோட்டை, கட்டான, பண்டாரகம, தொம்பே, ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 33 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண்கள், கொழும்பில் வசித்து தனியார் நிறுவனங்களில் கடமையாற்றுவதாக உறவினர்களுக்கு தெரிவித்து இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.