Print this page

வட்டவளையில் மேலும் 28 பேருக்கு தொற்று

December 26, 2020

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று முன்தினம் (24) 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் நேற்று (25) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.