Print this page

பருவமடைந்த மங்கைக்கு கொரோனா

December 27, 2020

பருவமடைந்து வீட்டுக்குள்ளே தனிக்கூடாரத்துக்குள் வைக்கப்பட்டிருந்த மங்கைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அந்த யுவதியை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் புஸ்ஸலாவ பகுதியிலுள்ள தோட்டமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருவமடைந்ததன் பின்னர் அந்த யுவதி, வீட்டுக்குள்ளே, கூடாரம் அமைத்து தனிமையில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும், அந்த யுவதிக்கு உணவு சமைத்து கொடுப்பதற்காக, கொழும்பிலிருந்து அவருடைய உறவுப் பெண்ணொருவர் சென்றுள்ளார்.

அப்பெண், சமைத்து கொடுத்துவிட்டு, கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதனையடுத்து, பருவமடைந்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற பொது சுகாதார அதிகாரிகள் சுமார் 13 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதில், பருவமடைந்து, கூடாரத்துக்குள் தனிமையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.