Print this page

நாட்டில் கொரோனா உயிரிழப்பு உயர்வு

December 28, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 04 மரணங்கள் நேற்று (27) பதிவாகியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்த, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஆண், ராகம பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண், கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதுடைய பெண், வவுனியாவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.