Print this page

கொரோனா பானத்தை பருகியவருக்கு தொற்று

December 28, 2020

கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிற கொரோனா தடுப்பு பானத்தை பருகிய ஒருவர் வைரசிற்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரக்காப்பொல பொது சுகாதார அதிகாரி ஹேமந்த குமார இந்த தகவலை தெரிவித்தார்.

இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகிய நபர் ஒத்னம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர். அங்கு இவருடன் சேர்ந்து 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்றும் ஹேமந்த குமார கூறினார்.