Print this page

இரவுநேர ஊரடங்கு சட்டம் அமுல்

December 29, 2020

கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் தென்னாபிரிக்காவில் இரவுநேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ரமபோசா அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17 ஆவது நாடாக தென்னாபிரிக்கா  விளங்குவதுடன், அங்கு இதுவரையில் 10 இலட்சத்து 11 ஆயிரத்து 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 ஆயிரத்து 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 7,458 பேர் பாதிக்கப்பட்டதோடு 336 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Last modified on Tuesday, 29 December 2020 06:33