Print this page

சந்தேகத்திற்கிடமான படகொன்றுடன் நால்வர் கைது

December 31, 2020

இலங்கையின் காலி கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பிச் செல்ல முற்பட்ட படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று காலை கடற்படையினரின் கட்டளைகளை மீறி, குறித்த படகுடன் சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போது, படகுடன் நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

படகை கரையோரப் பகுதிக்கு கொண்டு வந்தபோது, சந்தேக நபரொருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகை சோதனைக்குட்படுத்தி வருவதாகவும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் படகொன்றா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.