Print this page

ஜனாஸா அடக்கத்துக்கு அனுமதி கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

December 31, 2020

இலங்கையில் கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி, அடக்கம் செய்ய அனுமதி கோரி கொழும்பு, பொரளை மயானத்துக்கு முன்னால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொள்ளப்பட்டுள்ளது.

கூட்டிணைந்த முஸ்லிம் அமைப்புகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.