Print this page

சிகரெட்டின் விலை அதிகரிப்பு

இன்று (05) நள்ளிரவிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், சிகரெட்டின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், நிதியமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

அத்துடன், உள்நாட்டு சாராய உற்பத்திகளின் விலைகளும் இன்று நள்ளிரவில் திருத்தம் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவித்த அவர், எனினும், கள்ளு விலையில் மாற்றமில்லையென்றார்.

இதேவேளை, கெசினோ அனுமதிக் கட்டணம் 50 டொலரால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Tuesday, 05 March 2019 15:12