Print this page

அந்த மாதிரி தொழில் செய்த 9 பேர் கைது

இணையத்தளத்தைப் பயன்படுத்தி மிக சூட்சுமமான முறையில் நடத்திச் சென்ற விபசார விடுதியொன்று கல்கிசை பிரதேசத்தில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இணையத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரங்களையடுத்து முகவர் ஒருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 03 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் 09 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதாகிய பெண்கள் 25, 28, 32 வயதுடையவர்கள் என்பதோடு இவர்கள் வெலிமடை, பண்டாரகம, மாத்தறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொழில் நிமித்தம் கொழும்பிற்கு செல்வதாக தங்கள் வீடுகளில் கூறி விட்டு இத்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்கள் நீண்ட காலமாக இத்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.