Print this page

முன்னேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது

இன்றைய தினத்தில் இலங்கையின் பல ஆலயங்களிலும் மகா  சிவராத்திரி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில்  மகா  சிவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறுகிறது. 

லிங்கோற்பவருக்கு விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெறுகின்றது

தற்போதுள்ள நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறுகிறது