Print this page

மியன்மாரில் இடம்பெறும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக வடக்கு கிழக்கு ஒருங்கிணைந்த அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று (16) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மியன்மார் இராணுவ ஜீன்டா ஆட்சியுடன் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அனைத்துவித உறவுகளையும் பரிமாற்றங்களையும் நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்து இவ் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து மகஜர் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனிடம் சிவில் அமைப்புக்கள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினர், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.