Print this page

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில் வடக்கு , கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் , சிவில் சமூகத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , அரசியல் கட்சியினர் மற்றும் மத பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.