Print this page

அலி ரொசான் விடுவிப்பு

அனுமதிப்பத்திரமின்றி சட்டவி​ரோதமான முறையில், காட்டு யானைகளை தம்வசம் வைத்திருந்த குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அலி ரொசான் என்றழைக்கப்படும் நிராஜ் ரொசான் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய குழு முன்னிலையில், இன்று (07) அழைக்கப்பட்டது.

இதன்போதே, அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை நிராகரித்த நீதவான் குழு, அவர்களை விடுதலைச் செய்தது.