Print this page

54 இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 54 இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் கோவிலன் கடற்பரப்பில் படகில் பயணித்த 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்ட 1030 கிலோ கிராம் மீன்களையும் இலங்கைப் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து இரண்டு ட்ரோலர் படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 இந்திய மீனவர்கள் கைதாகியிருக்கின்றனர்.

அதேபோல, முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் 05 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது